Wednesday, February 20, 2013
Monday, December 10, 2012
ரெளத்திரம் பழகியவர்கள்
இயற்கையான செயல்களுக்காகவும், செயற்கையாய் கை குலுக்கவும், நமக்கு பிரியமானவர்களின் தொடுகைக்காவும், இத்தனை நாட்கள் உடன்கிடந்த என் கைகளுக்கு புதிய முகவரியை கொடுத்தது நிலே வசுந்தா. கொடுக்க காரணமாய் இருந்தான் சூர்யா. சூர்யாவை சூர்யாவாக எனக்கு தெரிந்ததை விடவும், செல்லமான குப்புவாகவே அதிகம் தெரியும். எங்கள் பள்ளி நாட்களில், கருநீலக்கலரில் சரிந்த தொப்பியுடன், அவன் நிறத்திற்க்கு சற்றும் பொருந்தாத யுனிபார்மில் ஸ்கவுட் உடை போட்டு உலவியவனை சீனியர்கள் என்ற பெயரில் சற்று அதிகமாகவே வதைத்திருந்தோம்.
பிலிம் இல்லாத காமராவில் அவனை படம் பிடித்ததாக ஏமாற்றி 15 ரூபாய் பணம் வாங்கிய போது தான். 15 வயதில் முதன் முதலில் எனக்கு "ஏமாற்றுதல்" என்ற பண்பு அறிமுகமாகி இருக்க வேண்டும். அடுத்த இரண்டு வயதில் எல்லாம் ஏமாற்றுவது தவறு என்று தெரிந்த, உத்தம ஆவதாரம் எடுத்த பின் உண்மையிலேயே அவனை புகைப்படம் எடுத்து அவனிடத்தில் கொடுத்து 15 ரூபாய்க்கான பாவ கணக்கை சரிசெய்து கொண்டேன். எத்தனையோ தடைகளை தாண்டி பிறந்ததாலேயே குப்புராஜ் என அவன் அம்மா பெயரிட்டது, மூக்குகுத்தி அவனை வேறொருவரிடம் விற்று மீண்டும் பெற்று கொண்டது என இந்த இளம் வயதிலேயே அவனுடைய வரலாற்று பக்கங்கள் அதிகம். ஆனால் நியுமராலஜியின் செல்ல கிள்ளலில், இப்போது அவன் சூர்யா. நமக்கு குப்பு தான்.
வாழ்க்கையில் ஓர் மிகப்பெரிய மாற்றம் தேவையாய் இருந்த தருணம். வாழ்வின் எல்லா திசைகளிலும், எல்லா மனிதர்களிலும், எல்லா நொடிகளையும் கடக்க விடாமல் மூச்சடைத்து நின்ற தருணம். என்னை நானே ஓர் ராட்சஷ பலூனில் இட்டு காற்றையும் நானாகவே அடைத்து கொண்டேன். யாராவது சிறிய துவாரத்தின் வழி வெளியேற்றமாட்டார்களா என்று ஏங்கி நின்ற பொழுது. புதிய மனிதர்கள், புதிய முகங்கள், புதிய மொழி எனக்கு தேவையாய் இருந்தது. ஆனால் என்னிடம் நான் மாற்றி கொள்ள விரும்பாததாகவும், மாற்றவே முடியாததாகவும் இருந்தது காதலும் அன்பும். காதலை மட்டும் வைத்து கொண்டு, காதலுக்கான சகலத்தையும் தொலைத்து விடும் வழியினை தேடி கொண்டிருந்தேன்.
அழைப்பு வந்தது, எடுத்தேன்.
"அக்கா பிரதீப் என்றான். " ஒவ்வொறு வாக்கியத்தின் முடிவிலும் இவன் அக்கா என்பது...ஒண்டியாய் போன எனக்கு அவ்வப்போது தமையன்களுக்கான ஏக்கத்தை அதிகரித்து கொண்டேயிருந்தது. எத்தனை அலுப்பான விஷயத்தை அவன் பேசினாலும், அவன் பேச்சு என்னை ஈர்க்காத தருணங்களில் நான் கவனம் இழந்து போகும் பொழுதும் அவன் சொல்லும் "அக்கா" என்னை விழிப்படைய செய்துவிடுகிறது.
"பெங்களூர், நிலே வசுந்தா ஹோம்ல நம்ம சிக்ஸ்த் சென்ஸ்வோட இனாகுரேஷன் இருக்கு வற்றீங்களா" என்றான்.
என்ன இனகுரேஷன் தெரியாது. நிலே வசுந்தா ஹோம் என்ன இடம் தெரியாது. எதற்காக என்னை கூப்பிடுகிறான் தெரியாது. வழிகாட்டி பலகை இல்லாத பாதைகள் சமயத்தில் சுகமானதாக ஆகிவிடுவதை போல். எங்கு போகிறோம், எதற்கு போகிறோம் என எந்த கேள்வியும் இல்லாமல். அவன் சொன்ன நாளில் சொன்ன இடத்திற்க்கு கிளம்ப மட்டுமே அனுமதித்திருந்தது என் மனம்.
பெங்களூர் சாலைகள் கோவையை போல் இல்லை. நாம் சரியாகவே போக நினைத்தாலும் தொலைவது நிச்சயம். நானோ தொலைவதற்காகவே கவனமாய் சென்றவள். அழகாக தொலைந்து போனேன். ஓர் உள்ளூர்வாசியின் உதவியுடன் என்னை சுலபமாக மீட்டெடுத்தான் குப்பு. "உங்களுக்காக தான் வெயிட்ங்" என்றான். சின்ன வயதிலிருந்தே நான், குப்பு பிரதீப் மூவரும் பள்ளியின் இளம் பேச்சாளர்களாக அறியப்பட்டிருந்தோம். நாங்கள் "ஸ்பீச் கேங்" எங்களை போலவே எங்கள் பள்ளியில், டான்ஸ் கேங், சிங்கிங் கேங் என பல உண்டு. எல்லோரும் ஒரு படையாய் கிளம்பி சுழற்கோப்பைகளை தட்டுவது, அடுத்த பள்ளி கேங்குகளுடன் வம்பிலுப்பது என சகலத்தையும் சத்தமில்லாமல் செய்து வந்தோம்.
எனக்கு அப்போது டி.ஆர் பாணியிலான பேச்சு வசனங்கள் எளிதில் வசப்பட்டதாலும். என் அப்பாவின் நண்பர்கள் சிலர் இலக்கியத்துறையில் பங்காற்றி கொண்டிருந்ததாலும் எனக்கு சில கவிதைகள், பாடல்கள் என சிலது அத்துபடி. அதில் நாங்கள் அதிகம் பிரயோகிப்பது.....
"இளைஞனே பருவ நெருப்பில் காய்ச்சிய வாளே! நாளை என்பது உன் திருநாளே!
நினைவிருக்கட்டும் உன் புருவ நெருப்பில் புகம்பங்கள்.
நீ இமைதிறந்தால் அதில் சூர்யோதையங்கள்!
வா நீ வெல்ல விண்வெளி காத்திருக்கிறது,
நீ பந்தாட கிரகங்கள் காத்திருக்கிறது."
இன்னும் தொடரும் இந்த உணர்ச்சி கவிதையின் பிற்பாதி எப்படி மறந்தது என்பதே ஆச்சரியம் தான். காரணம், பெண்மை, பாரதி, சமூகம், சினிமா என எந்த தலைப்பு கொடுத்தாலும் இந்த உணர்ச்சி கவிதையை மூவரும் முத்தாய்ப்பாய் சொல்லி பரிசை அள்ளுவோம். நாங்கள் வெவ்வேறு வகுப்பு என்பதால், சீனியர், ஜூனியர் என வெவ்வேறு பிரிவுகளில் போட்டி நடக்கும். ஆனால் நாங்கள் பேசுவது என்னவோ ஒரே ஸ்கிரிப்டை தான்.
இந்த ஸ்கிரிப்டை மனப்பாடம் செய்யும் படலம் மிக முக்கியமானது. ஓர் ராணுவத்தை தயார் செய்யும் பாங்குடன் அவர்கள் இருவருக்கும் எங்கள் இல்லத்தில் பயிற்சியளிப்பேன். டான்ஸ் கேங், சிங்கிங் கேங் அனைவரை விடவும் நாம் பரிசுகளை அள்ள வேண்டும் என்று அவர்களை மூளை சலவை செய்வேன். நான் அன்று கற்று கொடுத்த பாரதி பாடல்களை, இன்று பாரதியை விட்டு நெடும் தூரம் வந்துவிட்ட என்னிடம் அந்த பசுமை மாறமல் அப்படியே பகிர்ந்து கொள்கிற இந்த சிறுவர்கள் என்னை வியக்க செய்கிறார்கள்.
நான் பாடல்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று மட்டும் தான் இவர்களுக்கு கற்று கொடுத்தேன். ஆனால் அதை இத்தனை சுலபமாய் இவர்கள் வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. "சிக்ஸ்த் சென்ஸ்" என்ற சமூக அமைப்பை துவங்கி, இன்று பல நலதிட்டங்களை இவர்கள் செய்து வருவதை கண்டு நெகிழ்ந்து கொண்டேயிருக்கிறது மனம். இத்தனை அழகாய் இவர்கள் ரெளத்திரம் பழகுவார்கள் என நான் நினைக்கவில்லை, தனி மனிதனுக்கு உணவில்லையேல் இவர்களின் உணவை தியாகம் செய்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
"நிலே வசுந்தா" வில் நுழைந்த பொழுது அத்தனை நினைவுகளும் அலையலையாய் எழுந்தது மனதில். பெரும்பாலும் நான் ஏற்படுத்தி கொண்ட அழுத்தங்களுக்கலாலும், ஈஷாவின் ஆனந்தத்திலும் மட்டுமே நான் அழுவதுண்டு. அன்று என் கண்களை நனைத்த நீருக்கும் பலம் அதிகம். ஈரம் அதிகம். துவர்ப்பு அதிகம். 25 வண்ணங்களில் அங்கே தவழ்ந்து கொண்டிருந்தது அமாவசை இரவு. எப்படித்தான் மனது வந்ததோ இவர்களை ஆதரவற்று விட்டுவிட. குப்பு சொன்னான்
"சில குழந்தைங்க ஸ்ட்ரீட்ல கிடைச்சாங்க, சில குழந்தைங்க டெஸ்டிட்யூட்ஸ், சில குழந்தைங்க செமி ஆர்பன், சிலர் ஆர்பன்". இவங்களுக்கெல்லாம் என்ன வேணும்னு கேட்டு இவங்களுக்கு தேவையானத வாங்கிட்டு வந்திருக்கோம். பெங்களூர்ல "நிலே வசுந்தா ஹோமோட" சேர்ந்து தான் நாம் பணியாற்ற போறோம். அதுக்கு தான் இன்னிக்கி இனாகுரேஷன், நீங்க இந்த குழந்தைங்க முன்னாடி பேசனும். இவங்களுக்கு கிப்ட்ஸ் குடுக்கனும். இனிமே சிக்ஸ்த் சென்ஸோடு சேர்ந்து நீங்க இயங்கனும்.
தேவையற்ற இடத்திலும், நான் தேவையில்லை என்று நினைப்பவர்களின் இடத்திலும் தோண்டையின் ஈரம் வற்ற பேச தெரிந்த எனக்கு அந்த குழந்தைகளிடம் பேசத்தெரியவில்லை. என்னை விட நன்றாகவே சொல்லி கொடுக்க தெரியும் குப்புவுக்கு என்று அன்றைக்கு தான் தெரியும். "நாங்கல்லாம் உங்க அக்கா, அண்ணா மாதிரி, உங்களுக்கு என்ன வேணாலும் கேளுங்க" என்று சொல்ல சொன்னான். சொன்னேன். ஓர் குழந்தை எழுந்து மண்டியிட்ட வாக்கில் என்னிடம் "தன்னியவாதகளூ" என கன்னடத்தில் சொல்லவும்.
தெரித்து விழுந்தது என் துளிகள். ஒருவரை பார்த்து வணங்கி நிற்பது எத்தனை கூர்மையான ஆயுதம் என்று ஈஷாவின் உயர்நிலை வகுப்புகளில் உணர்த்தியிருக்கிறார்கள். நான் எத்தனை குற்றம் செய்திருந்தால், அந்த ஆயுதம் அத்தனை கூர்மையாக என்னை தாக்கியிருக்கும் என்று இன்றும் மலைக்கிறேன். செவ்வனே நிகழ்ந்தது துவக்க விழா. கருப்பு வெள்ளை ஓவியத்திற்க்கு வண்ணம் பாய்ச்சுவதை போல் அனைத்து குழந்தைகளும் ஸ்கெட்ச் பென்சில், கொடுத்து மகிழ்ந்தோம். அந்த பொருட்களை குழந்தைகள் வாங்கி கொண்டார்கள் என்பதை விட நாங்கள் அவர்களிடமிருந்து ஏராளமான புதிய பரிமாணங்களை வாங்கி கொண்டோம் என்பது தான் சத்தியம்.
சிக்ஸ்த் சென்ஸ் இரண்டு இளைஞர்களை மட்டும் கொண்டது அல்ல. இவர்களுக்கு பின் ஓர் மாபெரும் மாணவ படையே உண்டு. இந்த அமைப்பின் அடுத்த திட்டம்......."Desire Alive" குழந்தைகளின் விருப்பங்களை எழுதி வாங்கி... அதை வண்ண காகிதத்தில் அழகாய் புதைத்து, அவர்களுக்கு ஆச்சர்யமான சந்தோஷம் தருவதே....... எனக்கு அறிமுகமான புதிய முகங்களுடன் புதிய உணர்வுகளுடன், அசலான ஆறாம் அறிவை பயன்படுத்த துவங்கிவிட்டேன்.
நண்பர்களே நீங்களும் எங்களோடு இணைந்து கொள்ளுங்கள்.....பூக்களை விதைக்கத்தான் சூழல்கள் தேவை. புன்னகைகளை விதைக்க அல்ல.
மேலும் விபரங்களுக்கு http://www.sixthsenseindia.org/
தொடர்புக்கு Mobile: + 91 9894447177, 9894060566, 9629447577
மின்னஞ்சல்: info@sixthsenseindia.org

Tuesday, December 4, 2012
பாஷை
பாஷை
வேண்டாம் என்று புரியும் வார்த்தையில் சொல்லி
வேண்டும் என்பதை புரியாத பாஷையில் சொல்லும்
இந்த விசித்திரமான பாஷையை
புரிந்து கொள்ள முயன்றிருந்தால் கூட
நாம் சிநேகிதர்களாகியிருப்போம்.
*****
இன்று
இன்றைய நாளை இலக்காக வைத்து
நகர்ந்த என் நாள்காட்டி.
இன்றைய பொழுதில்
இலக்கை அடைந்தபின்
நீர் கப்பிய கண்களில்,
ஈரம் உலர்ந்தபடியே
வெரித்தது பார்த்தது
எந்த அறிவிப்பும் இன்றி
காலம் நட்டு வைத்துவிட்ட மற்றொரு இலக்கை.
******

Tuesday, October 9, 2012
சற்குருவும் --- SANTA க்ளாசும்....2
யாரிந்த அம்மா......?
எனக்கு சிறு வயதிலிருந்தே (இப்போதும் அப்படித்தான்). என்னை யார் அம்மா என்றாலும் பிடிக்காது. பிடிக்காது என்பதை விடவும், யார் இந்த பிள்ளை என்று கேட்டால் அதிகம் பிடிக்கும். பிடிப்பதையெல்லாம் உடைத்துவிடுவதற்கு தானோ இந்த அழைப்பு. பற்று விடற்காகவே இந்த பற்றற்றான் பற்று என்னுள் பரவியிருப்பதாய் தோன்றியது. அனைத்தையும் மீறி அவரிடம் கேட்பதற்க்காகவும் செய்து காட்டுவதற்காகவும் பல விஷயங்களை தயார் செய்து வைத்திருந்தேன். அவரை காண்பதற்க்கு சொற்ப நிமிடங்கள் முன்பு வரை கூட உடன் வந்த குழுவினரிடம் நான் கொண்டு வந்தவைகளை எல்லாம் செய்தும், சொல்லியும் காட்டி ஒத்திகை பார்த்து கொண்டிருந்தேன். அப்படியான ஒத்திகை பட்டியலில் எனக்கிருந்த முதல் கேள்வி...
சற்குரு எனக்கு உங்க மொபைல் நம்பர் வேணும் ப்ளீஸ்... நான் குட் மார்னிங் குட் நைட் மெசெஜ் அனுப்பனும்.
இரண்டாவது அவருடைய கண்களை பார்த்தவாறு என் கண்களை குறுக்கி குறுக்கி சிரிப்பது.
என இன்னும் பல வஸ்துக்களுடன் அவர் முன் அமர்ந்தவரை மாத்திரம் தான் நான். அதன் பின் மேடையும் மாந்தர்களும் அவர் வசம். தலையின் உச்சியில் கண்களுக்கு புலப்படாத கயிற்றை கட்டி பிரபஞ்ச வேலைகளுக்கு மத்தியிலும் சரியான இடத்தில் கயிற்றை ஏற்றி இறக்கி பொம்மலாட்டத்தை நிகழ்த்தி கொண்டிருந்தார் பப்பட் மாஸ்டர். My Master. என்று அவரை பார்த்த பரவசத்தில் மனம் ஆங்கிலத்திலெல்லாம் கவிதை எழுத ஆரம்பித்தது ஆனால் என் கீழ் உதட்டின் கயிற்றை, அந்த சந்திப்பு முடியும் வரை மாஸ்டர் கீழ் இறக்கவேயில்லை. அதனால் மட்டுமே அக்கனத்தில் என்னால் பேசமுடியாமல் போனது.
அவ்வப்போது ஒரு பனையோலை கூடையில் இருந்து விக்ஸை இன்ஹேலரை எடுத்து மூக்கில் உறிஞ்சியவாறே ஏதேதோ பேசினார். எனக்குத்தான் அது "ஏதேதோவாக" இருக்க முடியும். பிரபஞ்சத்தையும் தன்னையும் பிரித்து பார்க்காத ஒரு தன்மைக்கு என்னிடம் பேசுவதும் அந்த "ஏதேதோ" பேசுவதும் கூட ஒன்றாகத்தானே இருந்திருக்கும்.
தூரத்து கிழவியை காய்ந்த வயக்காட்டில் நெற்றியின் மீது கையை பிடித்து பார்ப்பது போல். வானத்தை கூர்ந்து பார்த்து கொண்டிருந்தார். வெள்ளியங்கிரியின் மணல்களை, அரன் கால்பதிந்த தடங்களை, துகள்களாக்கி சுழற்றி அடித்து கொண்டிருந்தது காற்று. அவருக்கும் காற்றுக்கும் புரிகின்ற பாஷையில் ஆங்கிலத்தில் எதையோ சொன்னார். பழைய சாமி படங்களில், எல்லா சாமிகளும் சுத்த தமிழ் பேசியே பழக்கப்பட்ட நமக்கு கடவுள் நேரில் பேசுவதே ஆச்சரியம். அதுவும் ஆங்கிலம் பேசும் கடவுள் என்றால்...... மலைப்படங்கவில்லை அந்த தரிசனத்தில். இன்னும் என் கீழ் உதட்டின் கயிறு மாஸ்டரிடம் தான்.
சற்குருவின் பாடல் தொகுப்புகள், கவிதைகள் எனப்பலதையும் பேசி தளர்ந்திருந்த அந்த இளவேனில் பொழுதில் அதிர்ந்து ஒலித்தது சற்குருவின் அலைப்பேசி.
நமஸ்காரம் என்று பேச்சை துவங்கியவர். வானத்தை பார்த்தவாறே எதோ பேசத்துவங்கினார். என் கண் முன்பு, நான் செய்த ஒத்திகைகள் எல்லாம் என்னுடன் வந்தவர்களோடு சேர்ந்து நையாண்டி செய்து கொண்டிருந்தன. அவர் அலைப்பேசியை பரிதவிப்புடன் பார்த்தவாறே, கண்ணாலேயே ஈஷா சுவாமியிடம் ஜாடை காட்டினேன். அப்போதைக்கு என் கண்களின் கயிறு மட்டும் சற்று தளர்வாக விடப்பட்டிருக்க வேண்டும் மாஸ்டரால். ஓவியத்தில் தூரிகை வரையும் மெல்லிதான கோடுகளை போல் அங்கமர்ந்திருந்த அனைவர் உதட்டிலும் ஒரு குறும்பு புன்னகை. சிரிப்பு காட்ட வேண்டாம் என்று ஜாடை வேறு.
அலைப்பேசி உரையாடலுக்கு பின் மெல்ல சற்குரு அந்த சந்திப்பின் முடிவிற்க்கு வந்து கொண்டிருப்பதை உணர முடிந்தது. ஒரு ஷணப்பொழுதில் நம் சிகையை கலைத்துவிடுகிறது அவர் நெற்றிக்கு நேர் கைகளை குவித்து வணங்கி விடைக்கொடுப்பது. ஒவ்வொறுவராய் வணங்கி ஆசிப்பெரும் பொழுது அவர்களுக்கு ஒரு மலரை கொடுத்தார் சற்குரு. என்னுடைய முறை இது.
காலில் விழ வேண்டும் விழுந்துவிட்டேன். அவருடைய கால்களை தொடலாமா கூடாதா என்ற குழப்பத்திலேயே சில நொடிகள் கழிந்து போனது. நாம் அவர் காலில் வணங்கும் இந்நேரம் அவர் நமக்காக என்ன செய்து கொண்டிருப்பார் என்ற சலனத்தில் சில நொடிகள் என மிருதுவாக ஆடிக்கொண்டிருந்த என் மனதின் பெண்டுலம். சட்டென்று நின்ற கனப்பொழுதில் என்னை ஒரு நீரோவியம் போல் உணர்ந்தேன். கடவுளின் ரூபத்தை பிரதிபலிக்கிற சலசலப்பு இல்லாத நதியை போல் அவர் கால்களின் கீழ் ஓடிக்கொண்டிருந்தேன். உடல் உயிர் மனம் உணர்வு என அவர் சொல்லும் அந்த நான்கும், எனக்குள் எந்த வேறுபாடுமின்றி சங்கமமாகி அவர் கால்களை நனைத்து கொண்டிருந்தது. நிழவின் நிழல் கீற்றும், அன்று சுழற்றி விசிய காற்றின் ஒரு துகளும் கூட என் நதியின் மிருதுவான ஓட்டத்தை கலைத்துவிட்டிருக்க கூடும் அப்படியான நிசப்தத்தில் தலையுயரித்தி, நீட்டிய என் உள்ளங்கையில் கனிந்து விழுந்தது.
ஊதா நிற பூ.

சொக்கி - 1
பிடிக்கும் என்ற வார்த்தை அத்தனை இலாவகமாக தாண்டி விட முடியாது. அதை தாண்டுவது, தாண்ட மனமில்லாமல் தவிப்பது, தாண்டிவிட வேண்டும் என்ற வீம்பில் மூக்குடைவது என அனைத்தும் சாத்தியம் 'பிடிக்கும்' என்ற வார்த்தையின் முன். ஆனால் எனக்கு வேலைக்கு போக பிடித்திருந்தது. சலவை துணியில் மடமடப்பில், கலர் கலர் வண்ணத்தில் தொங்கும் அடையாள அட்டை மார்பின் இடையில் விழும் அந்த ஸ்பரிசம் எனக்கு பிடித்திருந்தது. அதிலும் நம் பொருட்கள் வைப்பதற்காக பிரத்தியேகமான அறைகள் தருவார்கள் அதன் சாவியும் அடையாள அட்டையுமாய் சேர்ந்து ஒரு கொத்தாக தொங்கும் அந்த வடிவம் எனக்கு பிடித்திருந்தது. டப்பர்வேர் டப்பாக்கள் அதன் கையடக்க பைக்கள், பூப்போட்ட வாட்டர் பாட்டில் அதன் மேல் ஒரு ஸ்டீல் கேப். வேலைக்கு போகிறோம் என்றாலே வந்து விடுகிற கர்வம்.... வேலைக்கான அலுவலகத்திற்க்கு கொண்டுவிடுகிற தந்தை. காலையிலிருந்து மாலை வரை மூளையை அடைத்து கொள்கிற எதோ ஒரு ஓட்டம் என அனைத்துமாய் எனக்கு வேலைக்கு செல்வது பிடித்திருந்தது.
இந்த ஏற்பாடுகளினாலேயே நான் செய்யும் வேலையும் எனக்கு பிடிக்க வேண்டியதாய் இருந்தது. பல நேரங்களில் அற்ப சந்தோஷங்களுக்காக பல நிர்பந்தங்களை ஏற்படுத்தி கொள்வது என் இயல்பாகிவிட்டது. நுரைகளாக உடைந்து ஒன்றுமில்லாததாக ஆகியிருக்க வேண்டிய அலைகளை உப்புக்கு குழி வெட்டுவது போல் எனக்குள் தேவையில்லாமல் உள்வாங்கி தொந்தரவுக்குள்ளாகுவது ஒரு நோய் போல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது அந்த வடநாட்டு பயணத்திலிருந்து.
ஆசாத் தான் என்னை வடநாட்டுக்கு அனுப்பி வைத்தார். கலை நிகழ்ச்சி முதல் கருமாரி வரை அனைத்தையும் எடுத்து நடத்தும் இவன்ட் மேனெஜ்மென்ட்(event management) நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். அதை விடவும் சுழற்சங்கத்தில் முக்கிய பங்கில் இருந்த்தாலேயெ அன்று எங்கள் கல்லூரியின் இளைஞர் சுழற்சங்க நிகழ்ச்சிக்கு தலைமேயேற்று நடத்தினார். எனக்கு படிக்க பிடிக்கும் ஆனால் யாராவது பாடம் நடத்தினால் பிடிக்காது.
வணிக பாடங்களில் கணக்கு வகுப்புகள் பெரும்பாலும் பொருத்து கொள்ளும் தன்மையுள்ளனவாய் இருக்கும். அதை தவிர்த்த சில அனுபவ பாடங்கள் உண்டு. குறிப்பாக அதற்கு பெண் பேராசிரியர்கள் வந்து விட்டால்... புல்ஸ்டாப், கமா போன்ற அத்தனை குறியீடுகளுக்கு விளக்கம் கிடைப்பது தின்னம். நன்கு ஆங்கிலம் பேச தெரிந்த பெண்ணை உரக்க படிக்க சொல்லி. அதன் கடைசி வரியை மாத்திரம் பேராசிரியர் அழுத்தமாக சொல்லி முடித்துவைப்பார். அப்படியாகின் அவர் அப்பாடத்தை நடத்தி விட்டார் என பொருள் கொள்ளல் வேண்டும். இப்படியான வகுப்புகளில் வருகைபதிவோடு கெளரவ விடுப்பு கொடுத்து சகல மரியாதையுடன் சுழற்சங்க கூட்டம் என்றால் அனுப்புவார்கள்.
அந்த பொன்னான திட்டத்தினை பயன் படுத்தி கொள்ளவதற்காக நானும் கல்லூரியின் இளைஞர் சுழற்சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து கொண்டேன். "கேலிக்கு உள்ளாவது, திறமையின் உச்சம் தொட்டு காட்டுவது", இவை இரண்டும் பாட அல்லது ஆட துவங்கிய அந்த கனத்திலேயே புலப்பட்டுவிடும் என்பதால். மேடையில் பாடுவது, ஆடுவது இதை தவிர்த்த எந்த பயமும் எனக்கு இருந்ததில்லை. அது நானாக இருந்தாலும் சரி. வேறு யாராக இருந்தாலும் சரி. எனக்கு பேசிவிடுவது சுலபமாக இருந்தது. அந்த செளகரியத்தில் ஆசாத் தலைமேயேற்ற விழாவில் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து நான் ஆற்றிய உரை அல்லது உரையாக கருதப்பட்டது பெரும் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து பண்டமாற்றம் செய்வது போல் இரண்டு மாநிலங்களுக்கு இடையே இளைஞர்களை கலாச்சாரம், பண்பாடு நல்லுறவு என அனைத்தையும் பரிமாறி கொள்ளும் விதமாய் அந்த ஆண்டிற்க்கான "Inter state youth exchange" நடைபெற்றது. கோவையிலிருந்து நான்கு இளைஞர்கள் தேர்வு செய்ய வேண்டியது அசாத்தின் பொறுப்பு. அவர் முதலில் முன்மொழிந்த பெயர் என் பெயர்.
சொக்கி.
எனக்கு வாழ்வில் ஜெயித்துவிட வேண்டும் என்ற வேகம் எப்போதும் உண்டு. எப்படி, எங்கே, எப்போது, எவ்வாறு என அனைத்து ஏனா கேள்விகளையும் புறம் தள்ளிவிட்டு முன்னேறிவிட துடிக்கிற வேகம் என்னுள் இருந்தது. எனக்கு ஒரு பாடலில் பணக்காரன் ஆகும் கதாநாயகர்களை பிடிக்கும். அந்த கதையை பிடிக்கும். ஆனால் வாழ்க்கை அப்படி என்னை வாழ அனுமதிக்கவில்லை. வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் பொழுதுகளில், வாய்ப்புகள் எது தவிர்க்கப்படவேண்டியது எது என்று தெரிந்து விட்டாலே பாதை எளிதாகிவிட்டிருக்கும். இப்படியொன்று நடக்க நாம் அனுமதித்து விட்டோமே என்று மனம் திணறி தவிக்கிற சம்பவங்கள் பல. இன்று நினைத்தாலும் அதில் ஒன்றாக சேர்ந்து விட்டது நான் வடநாட்டுக்கு போக இசைவு தெரிவித்து அந்த துவர்ப்பான தருணம்.
முடியாது என்று சொல்ல முடிந்திருந்தால் எத்தனை சுலபமாகிவிட்டிருக்கும் என் வாழ்க்கை. அப்படி சொல்ல முடியாதனாலேயே எனக்கு விருப்பமற்ற ஒரு பாரம் என் சுயவரலாற்றின் நினைவு முதுகில் ஏறிக்கொண்டது. நான் இடரித்தவித்த அந்த நொடிகளில் எல்லாம் என்னொடு துணையாய் அருவமாய் பின் தொடர்ந்தேயிருக்கிறது எதோவொன்று.
இடரினும் தளரினும் எனதுறு நோய்
தொடரினும் உனகழல் தொழுது எழுவேன்.

Friday, July 6, 2012
கரையை கடக்கும் அலைகளை எல்லாமா
கடல் நினைவு வைத்து கொள்ளும்.
வெளிச்சத்தை மிச்சம் வைத்து நகரும்
நிலவுக்கு, ஏன் கடந்து வந்த ஜன்னல்கள் மீது அக்கரை.
எத்தனையோ பிரார்த்தனைகளோடு தன்
ஜடையை பிடித்து இழுக்கும் எந்த கைரேகைகளையும்
கணக்கு வைத்து கொள்வதில்லை ஆலய மணி.
நான் அலை
நான் ஜன்னல்
நான் உன் ஜடையில் படிந்த கைரேகை.
உனக்கு தான் இன்னும் எந்த பெயரையும்
வைக்கவில்லை நான்!!!
******
ஒவ்வொரு முறை மரணத்தை
கையில் அள்ளும் போதும்
மறந்துவிடுகிறேன் என் விரல்களின் நடுவில்
உன்னை போலவே மெல்லிதாய்
இருந்தும் இல்லாமலும் இருக்கும்
பொத்தல்களை!!!
***********
நீ எதை மறந்தாலும் தண்ணீரை மாற்ற மறந்ததில்லை
நீ எதை மறந்தாலும் சரியான நேரத்தில்
அந்த "Fish Food" டப்பாவில் இருக்கும் பொடிகளை தூவ மறந்ததேயில்லை.
நான் எப்போதும் உன்னை கண்ணாடி
குடுவை வழியே பார்த்து கொண்டிருந்ததால்
இப்போதும் என் செதில்கள் படபடக்க
உன்னை தேடி கொண்டேயிருக்கிறேன்.
நீ என்னை விட்டிருக்க வேண்டாம் கடலில்.
**********
புல்லாங்குழலின்
துளையில் ஒருவன்
உதடு குவிக்கும்
காட்சியை பார்த்து...
அச்சே எச்சில் என்கிறேன்.... நான்!
அது இசை என்கிறாய் நீ...!
இரண்டு உண்மைகளுக்கும்
நடுவே மண்டி கிடக்கும்
உணர்வுகளை - ஒரே மூச்சில் ஊதி
தள்ளுகிறான் அந்த இசைகலைஞன்!!

Wednesday, January 25, 2012
மன்னிப்பு
அன்று வானத்தில் இரட்டை நிலவு.
அதன் திகம்பர தரிசனத்தில் வியர்திருந்தது உலகம்.
அந்த நொடி பொழுதில் எதற்க்கும் யாருக்கும் மன்னிப்பு அருளப்படும் என்ற அசரிரீ பின் வரிசையில் நின்றன...
என்னற்ற மணல் வீடுகளை இடித்து தள்ளிய அலைகள்.
குலைமுற்றிய வாழை இலைகளை கிழித்துவிட்டதாய் காற்று
கொத்தி வந்த மகரந்தத்தை தவறவிட்ட தேனீக்கள்
யாராலும் ஸ்பரிசிக்கப்படாத புல்லாங்குழல்கள்
பட்டாம்பூச்சிக்கு வண்ணம் பூசும் கடவுளும் - அவற்க்கு பின்
என்னை காயப்படுத்திவிட்டதாக நீயும்.
உன்னை எப்போதும் காயப்படுத்தும் நானும்.
வித்தியாசம்
இந்த நொடிக்கும் அடுத்த நொடிக்குமான வித்தியாசம்
இந்த நொடி இருக்கும் நீ
அடுத்த நொடி இருக்கமாட்டாய் என்பது மட்டும் தான்.
இந்த நொடிபொழுது வித்தியாசம்
எனக்கு சில கோடித்தவிப்புகளை தருமென்றால்
நீ என்னோடே இருந்திருக்கலாம்.
இல்லை நான் உன்னோடு இல்லாமலையே இருந்துவிடலாம்.
தேவதை
ஒரு கையில் கோடாரியும்
மறுகையில் மண்வெட்டியும் ஏந்தி
அவன் மனதை வெட்டி பிளந்து பிளந்து - அந்த அடிமனதில் மண்டிகிடக்கிற மண்ணை கொத்தும் தேவதை நான் தானாம்.
இப்படியும் காதலியை வர்ணிக்கலாமாம்.
இல்லை என்னை இப்படித்தான் வர்ணிக்கவேண்டுமாம்.
தேவதை இப்படி தான் இருப்பாளா என்ற என் சந்தேகத்தை விடவும்
தெளிவாக தெரிகிறது.
நிச்சயம் உன் மனதை கத்தரிக்க கோடாரியும் மண்வெட்டியும் கொஞ்சம் அதிகம் தான் என்று.
வெண் சங்கு
வெண்சங்கின் மேல் வழுக்கி தவழும் கொழகொழப்பான
வெள்ளை நிறம் அவனுக்கு.
அந்த சங்கின் கடையோரத்தில் கச்சிதமாய் வெடித்திருக்கும் அந்த
இளஞ்சிவப்பு இதழ்களும் அவனுக்கு சாலபொருந்தும்.
என் இரைச்சலுக்கு
இசைக்கு...
எனக்குள் குவிந்திருக்கும் குழந்தைத்தனத்தின் உச்சத்தில்
போட்டு உடைக்கும் தெரிப்புகளுக்கு.....
என அனைத்திற்க்கு பின்னாளும்
ரீங்கரித்து என்னை பின்தொடர்வது
அந்த வெண்சங்கும் அவனும் மட்டும் தான்.
கூதல் காற்று
முந்தைய பிறவியின் உயிர் வாசத்தை ஏந்தி
என் வாசல் வந்தது கூதல் காற்று.
அருகில் அமர்ந்து மெல்ல என் மேல் ஊர்ந்து சென்றது.
பெயர் கேட்டேன் காதல் என்றது.
என் மேலும் பின் எனக்குள்ளுமாய் ஊர்ந்து சென்று
இன்று நானாகவே மாறிவிட்டிருந்தது அந்த கூதல் காற்று.
எனக்குள் நுழைந்ததாலேயே என் உடலின் எல்லையை தாண்ட அனுமதித்த இல்லை நான்.
இன்று நான் அனுமதித்தாலேயே வழி இருந்தும் போக மறுக்கிறது கூதல் காற்று.
இல்லை என் காற்று.
எனக்கு சொந்தமான காற்று.
Subscribe to:
Posts (Atom)